Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 8 நவம்பர் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 5, 6, ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த தூய்மைபணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களது போராட்டம் நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று மெரினா கடற்கரை, கலைஞர் நினைவிடம், ஜெயலலிதா நினைவிடம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தவுள்ளதாக, தகவல் வெளியானதை தொடர்ந்து அந்தப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து சென்னையை சுற்றி பார்க்க வந்த 20 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களிடம் எதற்காக இங்கு வந்தீர்கள்..? என்ன வேலை செய்கிறீர்கள்..? என்றதும், நாங்கள் எங்கள் ஊரில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம் என தெரிவித்தனர்.
உடனை அங்கிருந்த போலீசார் உங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என கூறி, உள்ளே செல்ல விடாமல் அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினார்.
போராட்டம் நடத்துபவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நாங்கள் சென்னையை சுற்றி பார்க்க வந்தோம், கலைஞர் நினைவிடம் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தை பார்த்து செல்வதற்காகவே வந்தோம்.
ஆனால் போலீசார் அனுமதிக்கவில்லை எங்களை திருப்பி அனுப்பப்பட்டவர்கள் என சுற்றூலா வந்த தூய்மைபணியாளர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ