தூய்மை பணியாளர்கள் போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்டு்ள்ளதால் சென்னை ரிப்பன் பில்டிங் வளாகம் முன்பு போலீசார்கள் குவிப்பு!
சென்னை, 8 நவம்பர் (ஹி.ச) மண்டலம் 5 மற்றும் 6 யை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இரண்டு மண்டலங்களிலும் தனியார் மையத்தை கைவிட வேண்டும் பழைய முறைப்படி தங்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை
Rippom


சென்னை, 8 நவம்பர் (ஹி.ச)

மண்டலம் 5 மற்றும் 6 யை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இரண்டு மண்டலங்களிலும் தனியார் மையத்தை கைவிட வேண்டும் பழைய முறைப்படி தங்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை ரிப்பன் மாளிகை வெளியே மேற்கொண்டனர்.

ஆகஸ்ட் 13 நள்ளிரவு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு பிறகு பல்வேறு கட்டங்களாக இரண்டு மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை மேற்கொண்ட போதும் அவர்களை காவலர்கள் ஆங்காங்கே கைது செய்தனர்.

நேற்று முன்தினம் மெரினா கடற்கரை கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போதும் அவர்களை காவலர்கள் வலுகட்டாயமாக கைது செய்தனர்.

இந்நிலையில் தங்களுக்கு மீண்டும் பழைய முறைப்படி பணி வழங்க வேண்டும் தனியார் மையத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 100 ஆவது நாளாக தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை தலைமைச்செயலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில் இந்த போராட்டம் முதலில் தொடங்கிய ரிப்பன் மாளிகை முன்பாக இன்று தூய்மை பணியாளர்கள் போராட்டம் மேற்கொள்ள திட்டமிட்டு்ள்ளதால் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ