நரிக்குறவர் இன மாண்பை காத்திடும் வண்ணம் சாதி சான்றிதழில் பெயரை மாற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவை, 8 நவம்பர் (ஹி.ச.) பழங்குடியின சமூகத்தில் சேர்க்கப்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு தற்பொழுது சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நம் மக்களுக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதன் மூலம் அவர்கள் பள்ளி
Coimbatore: A protest was held urging the change of name in the caste certificate to preserve the identity and honor of the Narikuravar community.


கோவை, 8 நவம்பர் (ஹி.ச.)

பழங்குடியின சமூகத்தில் சேர்க்கப்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு தற்பொழுது சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நம் மக்களுக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதன் மூலம் அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சாதிச் சான்றிதழ்களில் நரிக்குறவன் என்ற ன் என்ற எழுத்தை குறிப்பிட்டு வழங்குவதாகவும் எனவே அவர்களின் மாண்பை காத்திடும் வகையில் நரிக்குறவர் என்று ர் என்று எழுத்தை பயன்படுத்தி சாதிச் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று சமூக நீதி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் உட்பட நரிக்குறவர் மக்கள் பலர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவர்களது மாண்பை காத்திட வலியுறுத்தியும் மத்திய மற்றும் மாநில அரசுக்கு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

Hindusthan Samachar / V.srini Vasan