திருவண்ணாமலையில் வருகிற 21-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடக்கம்
திருவண்ணாமலை, 8 நவம்பர் (ஹி.ச.) பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் தி
வருகிற 21-ந் தேதி திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடக்கம்


திருவண்ணாமலை, 8 நவம்பர் (ஹி.ச.)

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 21-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து 24-ந் தேதி அதிகாலையில் சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக டிசம்பர் மாதம் 3-ந் தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பதால் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

Hindusthan Samachar / JANAKI RAM