கரூர் விவகாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் 3 ஆவது நாளாக தொடரும் விசாரணை
கரூர், 8 நவம்பர் (ஹி.ச.) கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உரிமையாளர்களிடம் 3வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் இன்று தற்போது வரை 9 பேர் ஆஜராகினர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொ
Karur CBI


கரூர், 8 நவம்பர் (ஹி.ச.)

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உரிமையாளர்களிடம் 3வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் இன்று தற்போது வரை 9 பேர் ஆஜராகினர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் நேற்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் என 11 பேர் நேற்று முந்தினம் ஆஜராகி இருந்தனர்.

இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் என நேற்றுமுன் தினம் ஆஜரான இரண்டு பேரிடம் மீண்டும் விசாரணை நடைபெற்றது.

இரண்டு நாட்களில் இதுவரை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் என மொத்தம் 16 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று 3 வது நாளாக தற்போது வரை 9 பேர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் ஆஜராகியுள்ளனர்.

கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அழைப்பு விடுத்தது, வாகனங்களின் உரிமம், சிகிச்சையில் சேர்க்கப்பட்ட போது பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN