Enter your Email Address to subscribe to our newsletters

நாகை, 8 நவம்பர் (ஹி.ச.)
நாகை மாவட்டம் திருவாய்மூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராமன்(40) முகம் மற்றும் தலையில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார்.
இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு எட்டுக்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நேற்றைய தினம் அந்த வழக்கு விசாரணைக்காக சென்று வந்த நிலையில் இன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இருசக்கர வாகனத்தில் வந்த ராஜாராமன், செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த வெளிப்பாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN