Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 8 நவம்பர் (ஹி.ச.)
சேலம் மேச்சேரி நீரேற்றுத் திட்டம், கொளத்தூர் தோணிமடுவுத் திட்டம், சேலம் சாணார்பட்டி-மூலக்காடு சாம்பல் நீரேற்றுத் திட்டம் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று 2021 தேர்தல் வாக்குறுதியில் சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களே? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மாம்பழம், மரவள்ளிக்கிழங்கு, காபி, சந்தனமரங்கள் எனப் பசுமை செழிக்கும் சேலம் மண்ணில் தேர்தல் வாக்குறுதியில் உள்ள ஒரு பாசனத் திட்டத்தைக்கூட நிறைவேற்றாமல், தண்ணீரின்றி பயிர்களைப் பாழ்படுத்தி விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் பொற்கால ஆட்சியின் அம்சமா?
சேலம் மாநகரின் தண்ணீர் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், உலகுக்கே உணவிடும் உழவர் பெருமக்களின் நலனையும் இம்மியளவும் கருத்தில் கொள்ளாமல், கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் கிடப்பில் போட்டு சேலத்தைச் சிதைக்கும் இந்த திமுக அரசை சேலம் மக்கள் துரத்தியடிப்பர் என்பது நிச்சயம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ