வருகிற 16-ம் தேதி முதல் நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் தொடர் - நியூசிலாந்து அணி அறிவிப்பு
வெலிங்டன், 8 நவம்பர் (ஹி.ச.) வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுக
வருகிற 16-ம் தேதி முதல் நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் தொடர் - நியூசிலாந்து அணி அறிவிப்பு


வெலிங்டன், 8 நவம்பர் (ஹி.ச.)

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிச்செல் சாண்ட்னர் தலைமையிலான அந்த அணியில் டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, வில் யங், கான்வே, மேட் ஹென்றி போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-

மிச்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டபி, ஜாக் போல்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லதம், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திர, நாதன் ஸ்மித், பிளேர் டிக்னர், வில் யங் .

Hindusthan Samachar / JANAKI RAM