Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 8 நவம்பர் (ஹி.ச.)
கோவை ரெட்பீல்டு பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரி தனது 78ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கல்லூரியில் பயிலும் மணவிகளின் தொழில் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு தொழில் அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU) கையெழுத்திடும் விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்,கல்லூரியின் செயலர் முனைவர் குழந்தை தெரசா,முதல்வர் மேரி ஃபபியாலா,துணை முதல்வர் ஜாக்குலின் மேரி,வேலை வாய்ப்பு அலுவலர் நித்யா,ஃப்ரீ லான்சர்ஸ் கிளப் நிறுவனர் ஜே,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் அகிலா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு செய்து வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்.
தொடர்ந்து சரியான முறையில் விடா முயற்சிகளுடன் வாய்ப்புகளை பயன்படுத்தினால், தொழில் முனைவோர்களாக எளிதாக சாதிக்க இயலும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் உட்பட மொத்தம் 78 புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU) உடன்படிக்கை அடிப்படையில் கையெழுத்திடப்பட்டன.
இது கல்வி மேம்பாடு, புதுமை, சமூகப் பொறுப்பு மற்றும் நாட்டிற்கான பங்களிப்பில் கல்லூரியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan