Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 8 நவம்பர் (ஹி.ச.)
சென்னை மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான போக்குவரத்து வசதியாகவும், பெண்களுக்குத் தனியாகத் தொழில் வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடனும் அரசு மானியத்துடன் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த ஆட்டோக்களைப் பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்று திட்ட விதிமுறைகள் தெளிவாகக் கூறுகின்றன. இருப்பினும், இந்த ஆட்டோக்களை ஆண்கள் இயக்குவதாகச் சமூக நலத்துறை அதிகாரிகளுக்குப் புகார்கள் வரப்பெற்றன.
தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி, மானிய உதவியுடன் வழங்கப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோக்களைப் பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும்.
விதிகள் பலமுறை எடுத்துரைக்கப்பட்ட பிறகும், தொடர்ந்து ஆண்கள் இந்த ஆட்டோக்களை இயக்குவது கண்டறியப்பட்டால், அந்த ஆட்டோக்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b