Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 8 நவம்பர் (ஹி.ச.)
பராமரிப்பு பணிகள் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நாளை மறுநாள் ( 10.11.2025) மின்தடை ஏற்படவுள்ளது.
இது குறித்து திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சீதபற்பநல்லூர் துணைமின் நிலையத்தில் வருகிற 10.11.2025, திங்கள்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு
கருதி நிறுத்தி வைக்கப்படும்.
அதன்டி புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b