இலங்கைக்கு கடத்த முயன்ற 1,500 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
ராமநாதபுரம், 8 நவம்பர் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள கடற்கரை பகுதி வழியாக கடத்தல் நடவடிக்கைகள் நடக்க இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கியூ பிரிவு போலீசாரும் உச்சிப்புளி காவல் நிலைய போலீசாரும் வலங்காபுரி கட
Peedi Leaf


ராமநாதபுரம், 8 நவம்பர் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள கடற்கரை பகுதி வழியாக கடத்தல் நடவடிக்கைகள் நடக்க இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கியூ பிரிவு போலீசாரும் உச்சிப்புளி காவல் நிலைய போலீசாரும் வலங்காபுரி கடலோரப் பகுதியில் மறைந்திருந்து கண்காணித்து வந்தனர்.

அப்போது கடற்கரையை ஒட்டிய சாலையில் பனைமரக்காட்டு பகுதியில் ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்ததை பார்த்து டிராக்டரை வழிமறித்த போது டிராக்டரை ஒட்டி வந்தவர்கள் இருளில் குதித்து தப்பி ஓடினர்.

வாகனத்தை சோதனை செய்தபோது, அந்த வாகனத்தில் 51 மூடைகளில் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது தலா 30 கிலோ வீதம் 1500 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் புதுமடம் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தட்டி ஓடிய கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN