தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, 8 நவம்பர் (ஹி.ச.) கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பின் பேரில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் கலந்து கொண்ட தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தமிழ்நாட்டை போல் தெலங்கானாவிலும் முதல்வரின் காலை உணவு திட்டம் செ
தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


சென்னை, 8 நவம்பர் (ஹி.ச.)

கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பின் பேரில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் கலந்து கொண்ட தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தமிழ்நாட்டை போல் தெலங்கானாவிலும் முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

மேலும் தமிழக முதல்வரின் பல்வேறு திட்டங்களை அவர் பாராட்டினார். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் நட்பு பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று

(நவ 08) பிறந்த நாள் காணும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் இன்று (நவ 08) எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

மாண்புமிகு தெலுங்கானா முதலமைச்சர் திரு. ரேவந்த் ரெட்டி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியத்துடன் அவர் பல ஆண்டுகள் பொது சேவை செய்ய வாழ்த்துக்கள்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b