தனியார் ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் லேப்டாப்பை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!
கோவை, 8 நவம்பர் (ஹி.ச.) கோவையில் திருட்டு,வழிப்பறி, களை, கொள்ளை, மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நாள்தோரும் அதிகரித்து வரும் நிலையில் ஐ.டி ஊழியர்களின் லேப்டாப்களை திருடி செல்லும் கண்காணிப்பு காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியு
Surveillance camera footage showing a mysterious man stealing laptops belonging to women working at a private IT company in Coimbatore has caused shock.


கோவை, 8 நவம்பர் (ஹி.ச.)

கோவையில் திருட்டு,வழிப்பறி, களை, கொள்ளை, மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நாள்தோரும் அதிகரித்து வரும் நிலையில் ஐ.டி ஊழியர்களின் லேப்டாப்களை திருடி செல்லும் கண்காணிப்பு காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஈச்சனாரி அருகில் இரத்தினம் ஐ டி.பார்க்கில் பணிபுரியும் இருவர், சுந்திராபுரம் - மதுக்கரை மார்கெட் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி பணிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்து காலை 6.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர் அந்த விடுதியில் இருந்து இரண்டு லேப்டாப்புகளை திருடி சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஐ.டி.ஊழியர்கள் அங்கு பதிவாகியிருந்த கண்காணிப்பு காட்சிகளுடன் கோவை சுந்திராபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படியில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / V.srini Vasan