Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 8 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30 - க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கேரளா போக்குவரத்து துறையினரால் திடீரென சிறை பிடிக்கப்பட்டு அந்தப் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கிவிடப்பட்டு கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு உள்ளனர்.
சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு கேரளா போக்குவரத்து துறை 70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய நடவடிக்கை, இரு மாநிலங்களுக்கு இடையேயான நீண்ட நாள் நல்லுறவையும், பொதுப் போக்குவரத்து ஒத்துழைப்பையும் பாதிக்கும் வண்ணம் அமைந்து உள்ளது.
இதை தொடர்ந்து இன்று முதல் தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் நூற்றுக்கு மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்படையும் மற்றும் தமிழகத்தில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
இந்த விஷயத்தில் உடனடியாகதமிழக அரசும், கேரளா அரசும் தலையிட்டு, இரு மாநிலங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan