Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 8 நவம்பர் (ஹி.ச.)
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள மருதமலை கோவிலில் அவ்வப்போது காட்டு யானைகள் உலா வருவது வழக்கம்.
இந்நிலையில் ஒற்றைக் காட்டு யானை மருதமலை கோவில் படிக்கட்டு வழியாக மேலே சென்று அடிவாரத்தில் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகளை ருசி பார்க்கும் வீடியோ தற்போது அப்பகுதியில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து ஒற்றைக் காட்டு யானை மருதமலை அடிவாரம் மற்றும் கோயில் பகுதி படிக்கட்டு போன்ற இடங்களில் நடமாடி வருவதால் பக்தர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
உடனடியாக அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.
Hindusthan Samachar / V.srini Vasan