Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 8 நவம்பர் (ஹி.ச.)
திரிபலா ஆயுர்வேதத்தில் மிக மிக முக்கியமானது. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மூன்று வித கலவைகளின் தயாரிப்பான இதை இன்று பலரும் பல பிரச்சனைகளில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் இது முதன்மையானது. 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதை பயன்படுத்தி வருகிறோம்.
திரிபலாவின் நன்மைகளை உணர்ந்து உலகம் முழுவதும் இதை பயன்படுத்த தொடங்கியிருக்கும் நிலையில் இவற்றை எதற்கு எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
திரிபலா உடலில் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது உடலில் உள்ள செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களைத் தடுப்பதில் திரிபலா பயனுள்ளதாக இருக்கும்.
திரிபலாவை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் திரிபலா தண்ணீரைக் குடிப்பது செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது. குடலில் குவிந்துள்ள நச்சுகள் மற்றும் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இது மலச்சிக்கலையும் தடுக்கிறது. இதனால், மூல நோய் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதில்லை. திரிபலா அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வீக்கத்தைக் குறைக்கிறது. இது நீரிழிவு நோய்க்கும் நன்மை பயக்கும். திரிபலா முன்கூட்டிய வயதானதைத் தடுக்கிறது. இது முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கிறது. இது எடை இழப்பு மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
திரிபலா சூரணம் நன்மைகள்:
செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகளை சரி செய்ய திரிபலா சூரணம் பருகலாம்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க திரிபலா சூரணத்தை தேனில் குழைத்து சாப்பிடலாம்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை நோய் கட்டுப்பட திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
முதலில் கடுக்காய்,உலர்ந்த பெரிய நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகியவற்றை சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை திரிபலா சூரணம் என்று சொல்வார்கள்.இதை சலித்து டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி திரிபலா பொடி சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும்.
மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். சைனஸ் நோயைத் தீர்க்கும். சுவாசப் பாதையில் உள்ள சளியைப் போக்க உதவும்.
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்கிறது. ரத்தசோகையை சரிசெய்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்.
கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் குளூகோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV