Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீநகர், 8 நவம்பர் (ஹி.ச.)
ஜம்மு காஷ்மீரில் வழக்கமாக குளிர்காலங்களில் எல்லையில் ஊடுருவல் சம்பவங்கள் குறையும். ஆனால், இந்த முறை தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கில் ஊடுருவல்களை அதிகப்படுத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என உளவுத்துறை தகவல் தெரிவித்தது.
அந்த தகவல் அடிப்படையில், காஷ்மீரில் பல்வேறு பகுதியில் ஊடுருவல் முயற்சியை முறிடிக்க ஆப்பரேஷன் பிம்பிள் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது.
குப்வாராவில் ஆப்பரேஷன் பிம்பிள் ராணுவ நடவடிக்கையில் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்ததில், இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அந்தப் பகுதியில் தற்போது தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
ஊடுருவல் முயற்சி தொடர்பாக, உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், நேற்று முதல் ஆப்பரேஷன் பிம்பிள் ராணுவ நடவடிக்கையை தொடங்கி, தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM