ஊசிமலை எஸ்டேட் பகுதியில் ரேஷன் கடையை சூறையாடிய ஒற்றைக் காட்டு யானை
கோவை, 8 நவம்பர் (ஹி.ச.) கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊசிமலை மட்டம் பகுதியில் இயங்கி வரும் ரோஜா மகளிர் சுய உதவி நியாய விலை கடையை நள்ளிரவு மூன்று மணி அளவில் கடையை இடிக்கும் சத்தம் கேட்டு அப்பகுதியில்
Wild elephant attack


கோவை, 8 நவம்பர் (ஹி.ச.)

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊசிமலை மட்டம் பகுதியில் இயங்கி வரும் ரோஜா மகளிர் சுய உதவி நியாய விலை கடையை நள்ளிரவு மூன்று மணி அளவில் கடையை இடிக்கும் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் எழுந்து பார்த்தபோது, ஒற்றைக் காட்டு யானை அதில் உள்ள அரிசி, பருப்பு முதலியவற்றை எடுப்பதற்காக மேற்கூரையை உடைத்துக் கொண்டு இருந்தது.

இந்த நிலையில் உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சத்தமிட்டும் கூச்சலிட்டும் அப்பகுதியில் இருந்து மக்கள் நீண்ட போராட்டத்திற்கு சிறிதும் அஞ்சாத நிலையில் அப்பகுதியில் இருந்து அகற்ற முடியாத நிலையில் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், அதனை அடர்ந்த காட்டுப் பகுதியில் விரட்டி அடித்தனர்.

மேலும் அப்பகுதியில் யானை முன்கூட்டியே வரும் என்பது தெரியாமல் வனத்துறை தீவிரம் காட்டாமல் இரவு நேரத்தில் ரோந்து பணியில் இல்லாத காரணத்தினால், யானைகள் ஆங்காங்கே குடியிருப்புகளையும் நியாய விலை கடைகளையும் உடைத்து சேதப்படுத்துகிறது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN