Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 8 நவம்பர் (ஹி.ச.)
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகை, முல்லை பெரியாறு மற்றும் வைகையின் துணை ஆறுகளான கொட்டக்குடி, வராக நதி, சுருளி ஆறு உள்ளிட்ட பல ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டத்தின் பூர்வீக பாசன நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து இன்று (நவ 08) முதல் 6 நாட்களுக்கு 1,000 கனஅடி விதம் தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைகை அணையில் இருந்து 6 நாட்களுக்கு நீர் திறப்பதால் 35,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். வைகை அணையில் நீர் திறப்பால் திண்டுக்கல், மதுரை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b