Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 9 நவம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே அண்ணா நகர் பகுதியில் கார், பைக்குகளை சுத்தம் செய்யும் வாட்டர் வாஷ் கடையில் தென்கீரனூரைச் சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞரும் கரீம்ஷா தக்காவைச் சேர்ந்த சாஹீல் என்ற சிறுவனும் வேலை செய்து வந்தனர்.
அரவிந்த், சாஹீல் இருவரும் நேற்று (நவ 08) இரவு கடையில் காருக்கு வாட்டர் வாஷ் வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இருவரையும் மின்சாரம் தாக்கியது.
இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவருவையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், கடை ஊழியர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு இருவரையும் தீவிர சிகிச்சை அளிக்குப்பட்ட நிலையில் அரவிந்த், சாஹீல் இருவரும் இன்று (நவ 09) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b