பேருந்து மோதி படுகாயம் அடைந்த நாய் - தள்ளுவண்டி கடை பெண்கள் மீட்டு மருந்து போட்ட நெகிழ்ச்சி சம்பவம்!
கோவை, 9 நவம்பர் (ஹி.ச.) கோவை, காந்திபுரத்தில் உள்ள வெளியூரு பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் நகர பேருந்து நிலையம் என நான்கு பேருந்து நிலையங்கள் உள்ளன. அதில் நகரப் பேருந்து நிலையத்தில், அப்பகுதியில்
A stray dog roaming near Gandhipuram bus station in Coimbatore was severely injured after being hit by a bus


A stray dog roaming near Gandhipuram bus station in Coimbatore was severely injured after being hit by a bus


கோவை, 9 நவம்பர் (ஹி.ச.)

கோவை, காந்திபுரத்தில் உள்ள வெளியூரு பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் நகர பேருந்து நிலையம் என நான்கு பேருந்து நிலையங்கள் உள்ளன.

அதில் நகரப் பேருந்து நிலையத்தில், அப்பகுதியில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று அங்கு சென்ற பேருந்து மோதியதில் படுகாயம் அடைந்து எழுந்து செல்ல முடியாத நிலையில் கீழே படுத்து இருந்தது.

இதனைப் பார்த்த அங்கு இருந்த பழங்கள் மற்றும் கம்மங்கூழ் விற்கும் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் பெண்கள் அந்த நாயை தூக்கிக் கொண்டு அவர்கள் நடத்தி வரும் பெட்டிக்கடை அருகே ரத்தம் வழிந்து கொண்டு இருந்த காயத்தின் மீது மஞ்சள் தூளை போட்டு சரி செய்தனர்.

ஆயிரக் கணக்கான மக்கள் கடந்து செல்லும் பேருந்து நிலையத்தில், நாயின் நிலையை கண்டு அதனை மீட்டு மருத்துவ குணம் கொண்ட மஞ்சள் தூளை செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / V.srini Vasan