திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்பாவம் பொல்லாதது படக்குழுவினர் சிறப்பு வழிபாடு!
திருவண்ணாமலை, 9 நவம்பர் (ஹி.ச.) பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரின் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு கடந்த சில மாதங்களாகவே அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரைப
Tiruvannamalai APP


திருவண்ணாமலை, 9 நவம்பர் (ஹி.ச.)

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரின் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு கடந்த சில மாதங்களாகவே அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரைப்பட நடிகை நடிகைகள், இயக்குனர்கள், தொழிலதிபர்கள் என வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு செல்கின்றனர்.

அந்த வகையில் இன்று ஆண்பாவம் பொல்லாதது படத்தின் கதாநாயகன் ரியோ ராஜ், துணை நடிகர் விக்னேஷ், திரைப்படத்தின் இயக்குனர் கலையரசன் தங்கவேல் உள்ளிட்டோர் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டனர், முன்னதாக சம்பந்த விநாயகரை வணங்கிய அவர்கள் தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை வணங்கி திரைப்படம் வெற்றி அடைய வேண்டி சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் மாட வீதியில் உள்ள சக்தி திரையரங்கத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று ரசிகருடன் கண்டு ரசித்தனர், முன்னதாக படக்குழுவினருக்கு சக்தி திரையரங்கம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது, கோவில் மற்றும் திரையரங்கிற்கு வந்திருந்த நடிகர்களுடன் அவரது ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள்....

ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம் வெளியீட்ட நாள் முதல் தற்போது வரை மக்கள் வரவேற்புடன் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது எனவும், திரைப்படம் வெளியான அனைத்து திரையரங்களிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருப்பதால், எங்களது மாவட்டத்திற்கும் வரவேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளோம்.

அதனைத் தொடர்ந்து வேலூர், ஓசூர், தர்மபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் சென்று ரசிகர்களை பார்க்க உள்ளதாக தெரிவித்தனர், திருவண்ணாமலைக்கு வருகை தந்தால் அண்ணாமலையாரை பார்க்காமல் செல்ல முடியாது என்பதால் அண்ணாமலையாரை சந்தித்து படம் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்ததாகவும் தெரிவித்தனர்.

ஆண்களுக்கு உள்ள பிரச்சனைகளை யாரும் படமாக எடுப்பதில்லை என்பதால் தான் இந்த படம் எடுத்திருப்பதாகவும், ஆனாலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உள்ள பிரச்சனையை சரிபாதியாக படத்தில் கருத்துக்கள் உள்ளதாகவும், அதனை இருவருமே ஏற்றுக் கொண்டதால் அதிகப்படியான வரவேற்பு கிடைத்ததாகவும், முதல் முறையாக ஆண்களைப் பற்றி பேசும் படமாக உள்ளதாகவும் இதனைப் பெண்களே ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN