Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 நவம்பர் (ஹி.ச.)
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. தேசிய நிர்வாகியும் நடிகையுமான குஷ்பூ, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை சுட்டிக்காட்டி கடும் கண்டனம் தெரிவித்தார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளன.
மாநிலம் முழுவதும் பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு முக்கிய காரணம் போதைப் பொருள்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள், என அவர் கூறினார்.
மேலும், டாஸ்மாக்கில் லாபம் பார்க்கும் நோக்கில் இரவு நேரங்களிலும் மதுபானம் விற்கப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் அரசியல் தலையீடுகள் உள்ளன, என குற்றம் சாட்டினார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து பேசுகையில்,
இந்திய அளவில் நடைபெறும் திட்டம் இது. தமிழ்நாட்டில் மட்டும் விதிவிலக்கில்லை. இப்போது சட்ட ரீதியாக மாற்றங்கள் செய்யாவிட்டால், இனி எப்போதும் முடியாது,என கூறினார்.
அதே நேரத்தில், “தவெகவினர் தவறாக பேச கூடாது என்று விஜய் தான் சொல்ல வேண்டும்,” என்றும்,
“எனது அரசியல் ஆசான் கலைஞர்.
யாரையும் மரியாதை இல்லாமல் பேசக்கூடாது என்று அவர் கற்றுக் கொடுத்தார்,
என்றும் குஷ்பூ தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J