திராவிட இயக்கத்தின் வருகைக்குப் பிறகுதான் சமஸ்கிருதச் சொற்களுக்குப் பதிலாக தமிழ் சொற்கள் உருவாகின - உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 9 நவம்பர் (ஹி.ச) திராவிட இயக்கத்தின் வருகைக்குப் பிறகுதான் பகுத்தறிவு, சீர்திருத்தம் ஆகியவை கலை, இலக்கியங்களில் தோன்றின. சமஸ்கிருதச் சொற்களுக்குப் பதிலாக தமிழ்ச் சொற்கள் உருவாகின என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்
Udhay


Twi


சென்னை, 9 நவம்பர் (ஹி.ச)

திராவிட இயக்கத்தின் வருகைக்குப் பிறகுதான் பகுத்தறிவு, சீர்திருத்தம் ஆகியவை கலை, இலக்கியங்களில் தோன்றின. சமஸ்கிருதச் சொற்களுக்குப் பதிலாக தமிழ்ச் சொற்கள் உருவாகின என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

சிறுகதை- நாடகம்- திரைப்படம் போன்ற கலை இலக்கியத் தளங்களில் திராவிட இயக்கம் நிகழ்த்திய சீர்திருத்தங்கள் பற்றிய அமர்வு, கழகத் துணைப் பொதுச் செயலாளர் , நாடாளுமன்ற குழுத் தலைவர் அத்தை கனிமொழி அவர்கள் தலைமையில் திமுக75_அறிவுத்திருவிழா-வின் 'இருவண்ணக்கொடிக்கு வயது 75' கருத்தரங்கத்தின் இரண்டாம் நாளின் மூன்றாவது அமர்வாக நடைபெற்றது.

இந்த அமர்வில், திராவிட இயக்க இலக்கியங்கள் குறித்து, எழுத்தாளர் அண்ணன் இமயம், நாடகக் கலையை நவீனப்படுத்திய திராவிட இயக்க நாடகங்கள் குறித்து, ஐயா பேராசிரியர் மு. இராமசுவாமி அவர்களும், அரசியல் செயற்பாடுகளுக்கு இணையாக பண்பாட்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் கழகத்தின் தனித்துவம் பற்றி, சகோதரர் சுகுணா திவாகரும் உரை நிகழ்த்தினர்.

அரசியலைப் போலவே எப்போதும் அறிவுச்செயற்பாட்டை முதன்மைப்படுத்தும், கழக இளைஞர் அணியின் பணி தொடரும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ