வருகிற 14-ம் தேதி முதல் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர் - கொல்லம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றம்
சென்னை, 9 நவம்பர் (ஹி.ச.) சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில்
வருகிற 14-ந் தேதி முதல் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர் - கொல்லம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றம்


சென்னை, 9 நவம்பர் (ஹி.ச.)

சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-06111) வருகிற 14-ந் தேதி முதல் கேரள மாநிலம் சங்கனாச்சேரி ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். அதே போல, கொல்லத்தில் இருந்து எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06112) 15-ந் தேதி முதல் சங்கனாச்சேரியில் நின்று செல்லும்.

சென்னை சென்டிரலில் இருந்து கொல்லம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (06119) வருகிற 19-ந் தேதி முதல் கேரள மாநிலம் சங்கனாச்சேரி ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

அதே போல, கொல்லத்தில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06120) 20-ந் தேதி முதல் சங்கனாச்சேரியில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM