முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
சென்னை, 9 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை ( SIR) தொடங்கி இருக்கிறது. தமிழக முழுவதும் பி எல் ஓ (BLO) எனப்படும் வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் வீடு வீடாக சென்று படிவத்தினை வழங்க
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது


சென்னை, 9 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை

( SIR) தொடங்கி இருக்கிறது.

தமிழக முழுவதும் பி எல் ஓ (BLO) எனப்படும் வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் வீடு வீடாக சென்று படிவத்தினை வழங்கி, அவற்றை நிரப்பி சேகரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை மேற்கொள்வதற்கு ஆரம்பம் முதலே தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக தி.மு.க. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (நவ 09) காலை 10 மணி அளவில் தொடங்கியது.

திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள் காணொலி மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

Hindusthan Samachar / vidya.b