Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 9 நவம்பர் (ஹி.ச.)
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், இன்று (நவ 09) 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தை எஸ்.ஐ.ஆர்., ஆபத்து சூழ்ந்துள்ளது. பல கோடி மக்களின் ஓட்டுரிமை கேள்விக்குறியாகி உள்ளது. நம் மக்களின் ஓட்டுரிமையைப் பாதுகாக்க, கட்சியினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும், வரும் 11ம் நாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எஸ்.ஐ.ஆர்.,க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்திடவும்,இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்களை வழங்கினேன்.
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனும் சதி வலையில் சிக்காமல் நம் மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்துவோம், கடமையாற்றுவோம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b