Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 நவம்பர் (ஹி.ச)
தமிழக சுகாதாரத்துறை சார்பில் 2025- 26 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 8 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு புற்றுநோய் தடுக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில் முதல்முறையாக HPV என்று சொல்லக்கூடிய Human Papilloma virus தடுப்பூசியை இலவசமாக தமிழகத்தில் விரைவில் 8 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது
தனியார் மருத்துவமனையில் இந்த தடுப்பூசியை செலுத்த சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என காரணத்தினால் தமிழக அரசு இலவசமாக இந்த தடுப்பூசியை வழங்க முடிவு செய்துள்ளது.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எதிர்காலத்தில் புற்றுநோய் பாதிப்பு இருக்கக் கூடாது என்பதற்காக இந்த திட்டம் தமிழக சுகாதாரத்துறை துவங்க உள்ளது.
இதற்காக தமிழக அரசு சார்பில் 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இந்த திட்டத்தினை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் இதன் மூலம் இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் தான் HPV என்று சொல்லக்கூடிய Human Papilloma virus தடுப்பூசியை இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ