Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 நவம்பர் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டு 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதிகள் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் உள்ளன. இதையடுத்து அத்தொகுதிகளுக்கு மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி மைய எண்கள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலக உதவி மைய எண் 044-25619523 மற்றும் 1950 எனவும், திருவள்ளூர் மாவட்டத் தேர்தல் அலுவலக உதவி மைய எண்ணாக 7305158550, செங்கல்பட்டு மாவட்ட உதவி மைய எண் 044-295417115, காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு 044-27237107 எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் வாக்காளர்கள், தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டுப் படிவம் தொடர்பாக சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்கு தொகுதிகளுக்கான தேர்தல் உதவி மைய எண்களைத் தொடர்பு கொண்டு அறியலாம் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b