Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 9 நவம்பர் (ஹி.ச.)
கடந்த 2003ம் ஆண்டு திருநெல்வேலி திருமண்டலத்தில் பிரிக்கப்பட்ட தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் சுமார் 140 சேகரங்களுக்கும் அந்தந்த ஆலயங்களில் வைத்து தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் வாக்களிக்க ஆலயத்திற்கு கட்ட வேண்டிய சந்தா தொகை, கட்டி இருக்க வேண்டும்.
ஆலயத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்.
வருடத்திற்கு மூன்று முறை திரு விருந்து ஆராதனையில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்தல் நாளன்று அரசின் முத்திரை பதித்த ஏதாவது ஒரு அடையாள அட்டையை காட்டி வாக்களிக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளுடன் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி திருமண்டலத்தை பொறுத்தவரை எஸ்.டி.கே.ராஜன் அணி, டி.எஸ்.எப் அணி என இரண்டு அணிகளாக இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் வெற்றி பெறும் திருமண்டல கமிட்டி உறுப்பினர்கள் இணைந்து லே செயலாளரை தேர்ந்தெடுப்பார்கள்.
லே செயலாளர் மற்றும்
உப தலைவர், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் இணைந்து பேராயரை தேர்ந்தெடுப்பார்கள்.
இதன் மூலம் இந்த தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நிர்வகிக்கப்படும்.
இந்த திருமண்டலத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி ஸ்தாபனங்கள் , முக்கிய பகுதிகளில் இடங்கள், பெரிய ஆலயங்கள், சமூக சேவை நிறுவனங்கள் என பல்வேறு சொத்துக்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு என பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.
இதை அனைத்தையும் நிர்வகிக்கக்கூடிய பதவிக்கு வரக்கூடிய இந்த தேர்தல் முக்கிய தேர்தலாக கருதப்படுகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் திருமண்டல கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சேகர கமிட்டி உறுப்பினர்கள் தேர்தல் இன்று (நவ 09) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தேர்தல் பணிகள் அனைத்தும் வீடியோகிராபர்கள் மூலம் அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
Hindusthan Samachar / vidya.b