Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 9 நவம்பர் (ஹி.ச.)
கரூர் சிஐஐ மற்றும் யங் இன்டியன்ஸ் இணைந்து கரூர் விஷன் 2030 நான்காம் பதிப்பு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இன்று (நவ.9ம் தேதி) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தேசிய கொடி ஏற்றினார்.
இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி. ஜோஷ் தங்கையா ஆகியோர்கள் புறாக்களை பறக்கவிட்டு,கொடியசைத்து மாரத்தான், வாக்கத்தான் நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
பின்னர் பெரியவர்களுக்கான மாரத்தான் போட்டி 10 கி.மீட்டர், 5 கி.மீட்டர் பிரிவிலும், சிறுவர்களுக்கான (8 வயது முதல் 14 வயதிற்குள்) மாரத்தான் போட்டி 5 கி.மீட்டர் பிரிவில் நடைபெற்றது.
இதே போல், பெரியவர்களுக்கான வாக்கத்தான் போட்டி 3 கி.மீட்டர் பிரிவில் நடைபெற்றது.
இப்போட்டியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, 2ம் பரிசு ரூ.5,000, 3-ம் பரிசு ரூ.3,000 மற்றும் 4, 5-ம் பிரிவினர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் இலவசமாக டி - சர்ட் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டன
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசும் போது,
கரூரின் பொருளாதாரத்தை 2030ம் ஆண்டில் ரூ.50,000 கோடியாக உயர்த்த வேண்டும்.
நம் முன்னோர்கள் கட்டி அமைத்து கொடுத்த கரூரை நாம் மேலும் மேம்படுத்தி அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும். என்றார்.
இந்நிகழ்வில், கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல், கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா, கரூர் வட்டாட்சியர் மோகன்ராஜ், சிஐஐ துணை தலைவர் பெருமாள், யங் இன்டியன்ஸ் யோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.
Hindusthan Samachar / vidya.b