Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 9 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது இங்கு உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரிலிருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் பாஜக தேசிய மாநில செயற்குழு உறுப்பினர் H. ராஜா, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் மதியம் மாசாணி அம்மன் கோவிலுக்கு வருகை புரிந்த H.ராஜா கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து மாசாணி அம்மனை சிறப்பு தரிசனம் செய்து மனம் உருகி வேண்டிக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / ANANDHAN