Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 9 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக் கல்லூரியினுள் நேற்றிரவு பாகுபலி என்று அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஜீப் மூலம் அதன் மீது ஹெட் லைட் வெளிச்சம் பாய்ச்சியும் சைரன் ஒலி எழுப்பியும் அதனை விரட்ட முயன்றனர்.
ஒரு கட்டத்தில் முன்னால் மரம் இருந்த காரணத்தால் பின் பக்கமாக ஜீப்பை நகர்த்திய போது பாகுபலி யானை மீது வாகனத்தின் பின் புறம் உரசியது.
இதனால் கோபம் அடைந்த யானை வனத்துறை வாகனத்தை அதன் தந்தங்கள் மூலம் தாக்க முயன்றது.
சுதாரித்து கொண்ட வனத் துறையினர் தொடர்ந்து முயற்ச்சித்து பாகுபலி யானையை வனப்பகுதி நோக்கி விரட்டினர்.
இச்சம்பவத்தால் வனத்துறையினருக்கோ யானைக்கோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றாலும் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
Hindusthan Samachar / V.srini Vasan