Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 9 நவம்பர் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பல்லவராயன் பத்தை கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது.
பின்னர் அதே இடத்தில் மீண்டும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதை தொடர்ந்து, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டது.
இந்நிலையில் இன்று அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இரவோடு இரவாக கட்டப்பட்டு வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும் இரவில் எந்த ஒரு வெளிச்சமும் இல்லாமல் மணல் மற்றும் சிமெண்ட் பயன்படுத்தப்படாமல் தரமற்ற முறையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு நேரடியாக ஆய்வு மேற்கொண்டு தரமற்ற முறையில் இரவோடு இரவாக வெளிச்சம் கூட இல்லாமல் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தரமாக அமைத்து கொடுக்க ஒட்டுமொத்த கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN