Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 9 நவம்பர் (ஹி.ச.)
மக்களின் அடிப்படை உரிமையையான வாக்குரிமையை பாதுகாக்க நவ.11 ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க என மாநிலச் செயலா் பெ.சண்முகம் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
வாக்குரிமை - குடியுரிமை இரண்டுமே இந்திய அரசியல் சாசனம் பொதுமக்களுக்கு வழங்கி உள்ள அடிப்படை உரிமைகள் ஆகும். இதை பறிக்க எஸ். ஐ. ஆா். என்ற போா்வையில் தோ்தல் ஆணையமும் மத்திய பாஜக அரசும் சோ்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளது.
இந்த சதியை முறியடிக்க, மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் தமிழகம் முழுவதும் வரும் செவ்வாய்க்கிழமை (நவ.11) நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் பொது மக்கள் திரளாக பங்கேற்று தங்களது கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்
Hindusthan Samachar / P YUVARAJ