Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 நவம்பர் (ஹி.ச)
தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தென் சென்னை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 100 குடும்பங்களை சேர்ந்த 200 பெண் குழந்தைகளுக்கு தலா 25,000 அரசு சேமிப்பு பாத்திரங்கள் மற்றும் சைதாப்பேட்டை தொகுதியை சார்ந்த 100 இளம் பெண்களுக்கு தலா 50000 வரை அதிகபட்ச முதிர்வு தொகை வழங்கும் நிகழ்ச்சி சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இதில் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்று பயனாளிகளுக்கு உரிய தொகையை வழங்கினார்.
நிகழ்வுக்கு முன்னதாக குழந்தை திருமணத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்,
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், பெண் சிசு கொலை தடுப்பு உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு வந்துள்ளது.
பெண் கரு மற்றும் சிசு கொலை தடுத்தல், பெண் கல்வியை மேம்படுத்துதல், சிறு குடும்ப முறையை ஊக்குவித்தல் உள்ளிட்டவை பலன்களாக உள்ளது.ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் 50 ஆயிரம் குழந்தை பெயரில் பதிவு செய்யப்படும் அந்த குழந்தைக்கு 3 வயது ஆவதற்குள் பதிவு செய்ய வேண்டும்.
ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு குழந்தை பெயரிலும் 50 ஆயிரம் பதிவு செய்ய வேண்டும், இரண்டாவது குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
72 ஆயிரம் ரூபாய் ஆண்டு வருமானம் இருந்த நிலையில், முதலமைச்சர் 1,20000 ரூபாய் ஆண்டு வருமானம் என உயர்த்தி உள்ளார்.
பெற்றோரில் ஒருவர் 40 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்க வேண்டும்.ஆண் குழந்தைகள் இருக்க கூடாது, எதிர்காலத்தில் ஆண் குழந்தையை தத்து எடுக்க கூடாது.
பெற்றோர் 10 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும் என்கிட்ட விதிமுறைகள் உள்ளது.
1,79,90,000 ஆயிரம் ரூபாய் தென் சென்னை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் தடுக்கும் வகையில் அவரவர வசிக்கும் இடங்களுக்கு வாகனத்தை அனுப்பி பெண்களுக்கு மட்டுமே புற்றுநோய் பாதிப்பு குறித்து சோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Women wellness in week (WWW) மாவட்டத்திற்கு ஒரு வாகனம் என 41 கோடி செலவில் இன்னும் 10 நாட்களில் முறையாக வாகனம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
HPV என்ற புற்றுநோய் தடுப்பூசியை 36 கோடியை தொடக்கமாக ஒதுக்கி இலவசமாக தமிழ்நாட்டில் உள்ள 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு போடப்பட உள்ளது தமிழகத்தில் தான் இந்தியாவில் முதல்முறையாக செய்யப்பட உள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து இந்த திட்டம் இந்திய முழுவதும் தொடங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் டெபாசிட் செய்து கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யத்தை அடுத்து இந்தியா முழுவதும் இலவசமாக தடுப்பூசி போட மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போட அடித்தளம் போட்டவர்.
TNMC என்ற அமைப்பு டெண்டர் விட்டுள்ளது அந்த பணிகள் முடிந்தவுடன் HPV தடுப்பூசி போடப்பட உள்ளது.
பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாதம் ஆயிரம் தரும் புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
9 லட்சம் மாணவ மாணவர்கள் மாதம் ஆயிரம் பெற்று வருகிறார்கள்.
குறைந்த வயதில் பெண்களை திருமணம் செய்தால் கருப்பை வளர்ச்சி அடையாமல் இருக்கும் அதனால் குழந்தைக்கும், தாய்க்கும் பாதிப்பு ஏற்படும்.
தமிழகத்தில் உள்ள 2200 கும் மேற்பட்ட மலை கிராமங்களில் 400 கும் மேற்பட்ட மலை கிராமங்களில் நடந்து சென்று குழந்தை திருமணம் பற்றி மட்டுமில்லாமல் மருத்துவத்துறை திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம். சமூக நலத்துறை சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் தான் பெண்களுக்கு என மிகப்பெரிய அளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.கருத்தடை செய்யும் வயதை 40 என்று இருந்ததில் இருந்து 49 என உயர்த்தி கொடுத்தார்.என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,
டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. டெங்கு பாதிப்பு உயிரிழப்புகள் வெகுவாக குறைந்துள்ளது டெங்கு பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி தரப்பில் கொசு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு,
மாநகராட்சி மட்டுமல்ல உள்ளாட்சி அமைப்புகளுக்கும் டெங்கு பாதிப்பை தடுக்க கொசு மருந்து அடிப்பதற்கான வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு தொடர்ச்சி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவமனை பதிவு செய்யப்படாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வரும் தகவல் குறித்த கேள்விக்கு, இயல்பான நடவடிக்கை தான், ஆண்டுதோறும் நடக்கும் நடவடிக்கை போல் இந்த ஆண்டும் எடுக்கப்பட்டுள்ளது.
என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ