Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 நவம்பர் (ஹி.ச)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
இதில் முரளி ராமசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்குமரன், கதிரேசன், எஸ்.வி.சேகர், ராதாரவி செந்தில், தேவயானி உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பொதுக்குழுவில் பங்கேற்றனர்.
2022 முதல் 2025 ஆண்டிற்கான சங்கத்தின் வரவு செலவு கணக்குகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.வாக்களிக்க தகுதியுள்ள நிரந்தர உறுப்பினர்களுக்கு ஒப்புதல். 2026 - 2029 ம் ஆண்டிற்கான தேர்தல் அறிவிப்பு குறித்து ஒப்புதல். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்,
தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் இயக்குனர்கள் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் வெப் சீரிஸ்களை தவிர்த்து திரைப்படங்கள் மீது கவனங்கள் செலுத்த வேண்டும் அப்படி செயல்படாத கலைஞர்களுக்கு சம்பந்தப்பட்ட சங்கங்கள் பணி ஒத்துழைப்பு வழங்கக்கூடாது அவர்களின் திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிடக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும் எனவும் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் சார்பாக ஏக மனதாக தீர்மானம்
தனியார் அமைப்புகள் விருது வழங்கும் நிகழ்ச்சி அல்லது இசை நிகழ்ச்சி நடத்தினால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் அனுமதி வாங்கி தான் நடத்த வேண்டும் அவ்வாறு அனுமதி கடிதம் பெறாமல் நடத்தினால் தனியார் அமைப்புகள் மீது சட்டரீதியாகவும் திரைத்தற ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானம்
திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் வரம்பு மீறி செயல்படும் youtube சேனல்கள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க தீர்மானம்.
ஆன்லைன் டிக்கெட் புக்கிங் என்ற இணையதள புக்கிங் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
தமிழ் திரைப்படங்களில் பட தலைப்பு சம்பந்தமாக பிரச்சனைகள் இருந்து வருவதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மூலம் மட்டுமே பதிவு செய்வது என முடிவு செய்து மாநில அரசுகளுடன் பேசி சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டுமென்று தீர்மானம்.
சிறிய முதலீட்டு தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு சரியான திரையரங்குகள் கிடைப்பதில்லை இதனை சரி செய்யும் வகையில் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அடங்கிய திரைப்பட வெளியீட்டு ஒருங்கிணைப்பு குழுவை அமைக்க வேண்டும் எனவும் தீர்மானம்
இனி ரஜினிகாந்த், அஜித், தனுஷ், சிம்பு, விஷால் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவரும் வியாபார பங்கிட்டு (Share Basic) முறையில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தயாரிப்பாளரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளே பேசுகையில், அதில் பொதுக்குழு கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான பேச வில்லை, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்த 8.5 கோடி வைப்பு தொகை தற்போது இல்லை, அதற்கு காரணமானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகம் கெட்டு போனதற்கு அரசியல் உள்ளே வந்தது காரணம் என எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.
ஆலோசனைக்கு பிறகு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூட்டாக பேசிகையில்,
குறிப்பாக முன்ணனி நடிகர்கள் 10 சதவீதம் அட்வான்ஸ் வாங்கி கொண்டு அதன் பிறகு வியாபாரத்திற்கு ஏற்ப ஊதியம் என்றும்,
விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது 8 கோடி ரூபாய் அளவில் நிதி முறைகேடு நடந்ததாக எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றம்சாட்டிய நிலையில் அந்த பணத்தை மீட்க எஸ் . ஏ சந்திரசேகர் தலைமையிலேயே ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மோசமாக விமர்சனம் செய்யும் youtubeபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற youtuber கர்களை திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிக்கு அழைக்கக்கூடாது என பிஆர்ஓ சங்கம் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளது.
செய்தியாளர் சந்திப்புகளில் வரைமுறைகளை மீறி கேள்வி எழுப்பபடுவதை தயாரிப்பாளர் சங்கம் ஊக்குவிக்காது.
மோசமாக விமர்சனம் செய்யும் விமர்சகர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். செய்தியாளர் சந்திப்புகளில் வரைமுறைகளை மீறி கேள்வி எழுப்பபடுவதை தயாரிப்பாளர் சங்கம் ஊக்குவிக்காது. ஃபெப்சி தொழிலாளர்களுடன் இணக்கமாக செயல்படுகிறோம்.
படத்தின் பிரமோஷனுக்காக தயாரிப்பாளர்களே சர்ச்சை கேள்வி எழுப்ப சொல்வதாக வரும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது, அவ்வாறு எந்த தயாரிப்பாளரும் செயல்பட வில்லையென்றார். திரையரங்குகளில் அதிக விலைக்கு பாப்கான், பார்க்கிங் கட்டண வசூலிப்பதை தடுக்கும் வகையில் அதன் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ