பிஜேபி ஒரு பாராங்கல் அதை கட்டிக்கொண்டு யார் கூட்டணியில் குதித்தாலும் சேதம் அவர்களுக்குத்தான் – நடிகர் எஸ்.வி. சேகர்!
சென்னை, 9 நவம்பர் (ஹி.ச) தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினுடைய பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்று வருகிறது இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற தயாரிப்பாளரும், நடிகருமான எஸ் வி சேகர் பேசியபோது, கோவை மாணவி பாலியல் சம்பவத்தி
Svsekar


சென்னை, 9 நவம்பர் (ஹி.ச)

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினுடைய பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்று வருகிறது

இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற தயாரிப்பாளரும், நடிகருமான எஸ் வி சேகர் பேசியபோது,

கோவை மாணவி பாலியல் சம்பவத்திற்கு, பாதிக்கப்பட்ட பெண் ஏன் அந்த இடத்திற்கு சென்றார் என நடிகை கஸ்தூரி தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த நடிகர் எஸ்வி சேகர்,

பாஜக என்ற மதவாத கட்சியில் சேர்ந்த பிறகு கஸ்தூரிக்கு மூளை மழுங்கிவிட்டது. எனவே உளறுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது அதேவேளையில் இதுபோன்று நடக்கிறதே என மற்றவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கலாம்.

தமிழ்நாட்டில் பிஜேபி இன்னும் வளரவே இல்லை. அண்ணாமலை பூஜ்யம் என்று மூன்று வருடத்திற்கு முன்பே சொல்லிவிட்டேன்.

3 சதவீதத்தை தாண்டி பிஜேபி இன்னும் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை.

பிஜேபி ஒரு பாராங்கல் அதை கட்டிக்கொண்டு யார் கூட்டணியில் குதித்தாலும் சேதம் அவர்களுக்குத்தான்.

மோடி,அமித்ஷா இருவரும் தமிழ்நாட்டில் ஒரு மாதம் தங்கினாலும், பிஜேபியின் வாக்கு சதவீதம் உயராது.

இவ்வாறு எஸ்வி சேகர் பேசினார்.

Hindusthan Samachar / P YUVARAJ