Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 நவம்பர் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்தாண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்ற போது சென்னை கீழ்ப்பாக்கத்திலிருந்து சென்ற சார்லஸ் என்ற நபர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வீடு கட்டி கொடுப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் குமார் பேசியதாவது,
தவெக தலைவர் விஜய் ஆணைக்கு இணங்க மத்திய சென்னையில் ஏற்கனவே ஒரு தளபதி விலையில்லா வீடு கட்டி தரப்பட்டுள்ளது.
தற்போது இரண்டாவது வீடு கட்டப்பட உள்ளது. இந்த இரண்டாவது வீடு நமது முதல் மாநாட்டிற்கு வரும் போது சாலை விபத்தில் உயிரிழந்த சார்லஸ் என்பவது குடும்பத்திற்கு வீடு கட்டி தரப்பட உள்ளது.
ஏற்கனவே அந்த குடும்பத்தை தளபதி அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் கொடுத்து இருந்தார்.
அப்போது அவர்கள் வீடு இல்லை என தெரிவித்து இருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று தற்போது வீடு கட்டும் பணிகளுக்கு பூஜை போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அவர்கள் எப்படி வீடு கட்ட வேண்டும் என கூறி உள்ளனர். அதற்கு ஏற்றார் போல் வீடு கட்டப்படும் எனவும் மற்ற உதவி எது தேவைப்பட்டாலும் அதனையும் நிறைவேற்றுவோம் என கூறினார். மத்திய சென்னை பொறுப்பாளர்கள் மற்றும் தவெக கட்சி இணைந்து இந்த வீட்டினை கட்டி தரப்படும் என தெரிவித்தார்.
உயிரிழந்த சார்லஸ் உறவினர் வேளாங்கண்ணி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,
அவர் இறந்து ஒர் ஆண்டு ஆகிறது.
எங்களுக்கு உறுதுணையாக இருந்து வீடு கட்டி கொடுக்க உள்ளனர்.
உயிரிழந்த சார்லஸ் தங்கை ஜெனிபர் அவர்களுக்கு வேலை ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ