Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 9 நவம்பர் (ஹி.ச.)
பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது.
2-ம் கட்ட தேர்தல் வருகிற
11-ந் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக உச்சக்கட்ட பிரசாரம் நடை பெற்று வருகிறது.
பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று (நவ 09) மாலை 5 மணியுடன் ஓய்கிறது.
இந்நிலையில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் இன்று (நவ 09) பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ் கூறியதாவது,
இன்று தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாள். சூழல் மிகவும் நன்றாக இருக்கிறது. பிஹார் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதியும் அவர்கள் அதையே செய்வார்கள்.
பிரதமராக இருந்தாலும் சரி, வேறு எந்த அமைச்சராக இருந்தாலும் சரி, எங்கள் அரசாங்கம் 17 மாதங்களாக வழங்கிய இடஒதுக்கீட்டைப் பற்றி யாரும் பேசவில்லை.
மக்களின் 65% இடஒதுக்கீட்டை பிரதமர் தின்றுவிட்டார். அவர்கள் பிஹாருக்கு என்ன கொடுத்தார்கள், குஜராத்துக்கு என்ன கொடுத்தார்கள் என்பது பற்றி பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், ராஷ்ட்ரிய ஜனதா தள ஆதரவாளர்கள் தேஜஸ்வி யாதவின் பிறந்தநாளை முன்னிட்டு பாட்னாவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிஹார் முதல்வர் தேஜஸ்வி யாதவ்’ என்ற சுவரொட்டிகளும் அவரது வீட்டிற்கு வெளியே ஒட்டப்பட்டிருந்தன.
என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b