விடுமுறையைக் கொண்டாட குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தென்காசி, 9 நவம்பர் (ஹி.ச.) தென்காசி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது குற்றால அருவிகள் தான் தென்காசியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லையிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு அருகே குற்றாலம் அருவி
விடுமுறையைக் கொண்டாட குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தென்காசி, 9 நவம்பர் (ஹி.ச.)

தென்காசி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது குற்றால அருவிகள் தான் தென்காசியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லையிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு அருகே குற்றாலம் அருவி அமைந்துள்ளது .

குற்றால அருவியின் மலை உச்சியில் இருந்து விழும் தண்ணீரில் மூலிகைகள் கலந்திருப்பதாகவும் மக்களிடையே நம்பிக்கை இருப்பதால் ஏராளமானோர் இங்கு வருகை தருகின்றனர்.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர்.

இந்நிலையில் வார விடுமுறையை முன்னிட்டு இன்று (நவ 09) குற்றால அருவிகளில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

இன்று காலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அருவியில் ஆனந்தக் குளியலிட்டு மகிழ்ந்தனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரம் களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b