Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 9 நவம்பர் (ஹி.ச.)
2025-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று (9.11.2025) தமிழகம் முழுவதும் நடைபெறுகின்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி. மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, காமராஜ் கல்லூரி ஆகிய 4 தேர்வு மையங்களில் ஆண் விண்ணப்பதாரர்களும், புனித மரியன்னை கல்லூரி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய 2 தேர்வு
மையங்களில் பெண் விண்ணப்பதார்களும் என 6 தேர்வு மையங்களில் இன்று காலை தேர்வு தொடங்கியது.
இத்தேர்வில் மொத்தம் 7,556 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் கருப்பு நிற பந்து முனை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையான ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு கொண்டுவர வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் காலை 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ப்ளுடூத் போன்ற எல்க்ட்ரானிக் கருவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது.
என்பன போன்ற தேர்விற்கான விதிமுறைகளை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விதித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b