Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 1 டிசம்பர் (ஹி.ச.)
திமுகவின் டெல்லி பிரதிநிதியும் - மாநில விவசாய அணி பிரிவு செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் வீடு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேகரன் நகர் பகுதியில் அமைந்துள்ளது.
அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று இருந்ததால், வீடு பூட்டி இருந்துள்ளது. இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து வைர நகைகள் - தங்க நகைகள் என் 300 சவரன் நகைகள் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருள்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து இந்த திருட்டுச் சம்பவம் குறித்து தமிழ் பல்கலைக்கழகப் பகுதி காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மோப்பநாய் உதவியுடன் கைரேகை நிபுணர்களுடன் தடயங்களை சேகரித்தனர்.
திமுக நிர்வாகி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் தஞ்சையில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN