நடிகை சமந்தாவிற்கும் இயக்குனர் ராஜ் நிடிமோருக்கும் இன்று ஈஷா யோகாவில் திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்
சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.) நடிகை சமந்தா 2017 ஆம் ஆண்டு நடிகர் நாகச்சதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் நான்கு வருடங்களுக்குப் பிறகு இருவரும் 2022 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதேபோன்று Go Goa Gon
Sam


சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.)

நடிகை சமந்தா 2017 ஆம் ஆண்டு நடிகர் நாகச்சதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இதன் பிறகு ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் நான்கு வருடங்களுக்குப் பிறகு இருவரும் 2022 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

அதேபோன்று Go Goa Gone, A Gentlemen உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவர் தன் மனைவி சியாமளாவை 2022 ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்.

இதன் பிறகு ராஜ் இயக்கத்தில் தொடர்ந்து ஃபேமிலி மேன், சிடாடெல் போன்ற வெப் தொடர்களில் நடிகை சமந்தா நடித்து வந்துள்ளார்.

இந்த சமயத்தில் இருவருக்கும் நட்புறவு ஏற்பட்டு, பின்பு இருவரும் ஒருவரையொருவர் காதலை வெளிப்படுத்திக் கொண்டதாக சொல்லப்படுகிறது

அண்மையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் சமந்தாவும், ராஜ் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக ஒன்றாக கலந்து கொண்டனர்.

அதேபோன்று நடிகை சமந்தா பங்கேற்க கூடிய அனேகமான நிகழ்ச்சிகளில் இயக்குனர் ராஜும் தென்படுவதுண்டு. அதனால் இருவரும் காதலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

அப்படி இருக்கையில் இன்று கோயம்புத்தூர் ஈஷா யோகாவில் உள்ள லிங்கபைரவி கோவிலில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் 30 பேர் மத்தியில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ