Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 1 டிசம்பர் (ஹி.ச.)
கோபி செட்டிபாளையம் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் சுயநலவாதி என விமர்சனம் செய்துள்ளார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,
எடப்பாடி பெரிய தலைவர் அல்ல.. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
யார் என்ன வேண்டமானாலும் சொல்லட்டும் என்ன பொறுத்தவரை நான் தெளிவாக உள்ளேன்.
தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு அளிப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan