அரசு பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி
செங்கல்பட்டு, 1 டிசம்பர் (ஹி.ச.) சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும்,கூவத்தூரில் இருந்து வேலைக்கு 20 பேரை ஏற்றிச்சென்ற தனியார் வேனும் எதிர்பாராத விதமாக கிழக்கு கடற்கரை சாலை குன்னத்தூர் அருகே நேருக்கு நேர் மோத
Chengalpattu Accident


செங்கல்பட்டு, 1 டிசம்பர் (ஹி.ச.)

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும்,கூவத்தூரில் இருந்து வேலைக்கு 20 பேரை ஏற்றிச்சென்ற தனியார் வேனும்

எதிர்பாராத விதமாக கிழக்கு கடற்கரை சாலை குன்னத்தூர் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில்

வேனில் பயணித்த பானு (24), உமா (40) ஆகிய இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தொடர்ந்து, வேனில் பயணித்த மேலும் சிலர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

தொடர்ந்து, விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிகாலையில் நடந்த இந்த விபத்துச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம், உயிரிழந்த பெண்களின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வு செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN