விளைநிலங்களை நீர் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலை
கடலூர், 1 டிசம்பர் (ஹி.ச.) வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர
Cuddalore Farming Land


கடலூர், 1 டிசம்பர் (ஹி.ச.)

வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.

இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்த கனமழையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 13 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தன. நேற்று காலையும் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதுபோல பரங்கிப்பேட்டை அருகே உள்ள மணிக்கொல்லை, பூவாலை, பால்வாத்துன்னான், அலமேலுமங்காபுரம், வயலாமூர், சேந்திரக்கிள்ளை, வல்லம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விளைநிலங்களில் மழைநீர் சூழ்ந்தது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN