Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 1 டிசம்பர் (ஹி.ச.)
சாதி, மதம், இனம், மொழி, நிறம், அரசியல், நாடு, சமூகம், பண்பாடு போன்ற அளவுகோள்களில் அடிமைப்படுத்தப்பட்டவர்களை அதில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் , “நாம் யாரும் அடிமையில்லை, நமக்கு யாரும் அடிமையில்லை” என்ற அரசியல் முழக்கத்தை செவிமடுத்த ஐ.நா அவையானது 1986 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2 ஆம் தேதி சர்வதேச அடிமைகள் ஒழிப்பு நாளை அனுசரித்து வருகிறது.
வரலாறு & முக்கியத்துவம்
சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு தினம், தனிநபர் கடத்தலை ஒடுக்குவதற்கும், பிறரை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்கும் எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டை (டிசம்பர் 2, 1949 இன் தீர்மானம் 317(IV)) பொதுச் சபை ஏற்றுக்கொண்ட தேதியைக் குறிக்கிறது.
இந்த நாளின் கவனம், சமகால அடிமைத்தன வடிவங்களை ஒழிப்பதாகும், அதாவது ஆட்கடத்தல், பாலியல் சுரண்டல், குழந்தைத் தொழிலாளர் முறையின் மோசமான வடிவங்கள், கட்டாய திருமணம் மற்றும் ஆயுத மோதலில் பயன்படுத்த குழந்தைகளை கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்தல் என்று ஐ.நா. தீர்மானம் கூறுகிறது.
தற்போதைய நவீன உலகிலும் அடிமைகள் இருக்கத்தான் செய்கின்றனர். கட்டாயப்படுத்தி வேலை பார்ப்பவர்கள், கடத்தப்படுதல், கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர், பாலியல் தொழிலாளர் என பல வழிகளில் தற்போது அடிமைகள் இன்னல்படுகின்றனர்.
ஒவ்வொருவரும், மற்றொருவரின் சுதந்திரத்திற்கும் மதிப்பளிக்க இத்தினத்தில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV