Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 1 டிசம்பர் (ஹ.ச.)
ஜனாதிபதி விருது பெற்ற திரைப்பட இயக்குனர் எஸ் எஸ் தேவதாஸ்,தன்னுடைய 88 -ஆவது வயதில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு 10:30 மணி அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இவர் ஆகஸ்ட் 3 -1938 ஆம் ஆண்டில் மதுரையில் பிறந்தார்.
திரைப்பட தயாரிப்பாளர் எஸ் எம் எஸ் சுந்தரராமன் ருக்மணி அவர்களின் புதல்வர்களில் ஒருவர்.
திரைப்பட இயக்குனர்
ஏ பீம்சிங் அவர்களிடம் பல பட வரிசை வெற்றி படங்கள் தயாரிப்பில் தமிழ் மற்றும் இந்தி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து நற்பெயரை சம்பாதித்துக் கொண்டதுடன் திரையுலகில் பிரபல நடிகை தேவிகா அவர்களின் காதலை சம்பாதித்து திருமணம் செய்து கொண்டார்.
இத்தம்பதியருக்கு கனக மகாலட்சுமி என்ற பெயர் கொண்ட நடிகை கனகா உண்டு.
வெகுளிப் பெண் தமிழிலும் தெலுங்கிலும் தயாரித்து இயக்கினார் மற்றும் மலையாள படத்தையும் இயக்கியுள்ளார்.
இவர் தீவிர ஐயப்ப பக்தர் குருசாமி எம் என் நம்பியார் அவர்களின் அன்பை பெருமளவில் பெற்றிருக்கிறார்.
40 ஆண்டுகளுக்கு மேல் சபரிமலைக்கு சென்று ஐயப்பனின் முழு அருளை பெற்றிருக்கிறார்.
கார்த்திகை மாதத்தில் இவர் மனித வாழ்க்கையை புனித வாழ்க்கையாக நிறைவு செய்து கொண்டிருக்கிறார்.
Hindusthan Samachar / Durai.J